வியர்வை
இந்த டிரஸில்
நான் அழகா இருக்கேனா?
என்றாள் பார்கவி,
ஒரு புதிய
மஞ்சள் நிற சேலையில்..
அசத்தலாக இருந்தாள்.
ஆனாலும்,
பரவாயில்லை...
மோசமில்லை.
என்றேன்.
உனக்கு வயசாயிடிச்சி..
அதான் உனக்கு பொறாமை.
என்றாள்.
(கலாய்க்கிறாளாம்....)
இருபத்தைந்து
ஆண்டுகள்
ஆகியிருந்தன
நான் பிறந்து...
எனவே நான்
வயதானவன்தான்.
எனக்கு சம்மதமல்ல தான்.
இருந்தாலும்,
இந்த இடத்தில்
என் மௌனம் சம்மதமாகிவிடும்,
எனவே,
முத்தமிடும் அளவுக்கு
பக்கத்துல வந்து சொல் அதை..
என்றேன்.
"அய்ய..
புத்திய பாரு..."
பழிப்பு காட்டினாள்.
அல்லது
கோபப்பட்டாள்.
புத்தியும் இல்ல,
பத்தியும் இல்ல...
எனக்கு வயசாகிடிச்சி.
அந்த அளவுக்கு
நெருக்கமா வந்தால் தானே
என்னால் பார்க்க முடியும்...?.
வயசானவனுக்கு
கண்பார்வை அவ்வளவாக கிடையாது...
கிட்ட வந்தால்,
தெளிவா பாத்து சொல்லுவேன்...
நான் உன்னை
முத்தமிடுவேன்
என்று
சொல்லவே இல்லை.
ஆனால்
அவளுக்கு வந்தது
இக்கவிதையின் தலைப்பு.
✍️கவிதைக்காரன்.