மறையும் மண்ணின் விளையாட்டுக்கள்

மரபணு மாறியதோ இல்லையோ
மண்ணின் விளையாட்டுக்கள் மாறியது
மனதை கொள்ளை கொண்ட
மகிழ்ச்சியான தருணங்கள் மலையேறியது

கண்ணாடியில் உருவான குண்டது
கைவிரல் கவணியாய் வளைய
கிளம்பி பாய்ந்த குண்டது
காணாமல் போனது சோடாபுட்டியிலும்

கடைசல் கடையில் ஜனனமெடுத்தது
கயிற்றின் வீச்சில் சுற்றியது
குத்தியெடுத்து அபிட் என்றோம்
கடைகளில் தேடணும் இன்று

கிரிக்கெட்டுக்கு இணையான விளையாட்டது
கிட்டிப்புள் கில்லிதான்டா என்று
காசுபணம் தேவையில்லை விளையாட
கண்காணாமல் போனது இன்று

கத்தை கத்தையாய் கரைத்து
கற்கின்றனர் விளையாட்டை இன்று
கல்லா கட்டுகிறது சிலருக்கு
கனவு மட்டுமே பலருக்கு

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (4-Oct-21, 9:51 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
பார்வை : 40

மேலே