மின்சாரம்
பக்கத்துக்கு வீட்டினர்
முகம் பார்க்க நீ
பதுங்கி கொள்ள வேண்டி
இருக்கிறது..
நீ அங்காவது இருக்கிறாயா என
தேடி அறிமுகமாகி கொள்கிறார்கள்
ஆறாண்டு அதே தெருவில்
இருந்தவர்கள் இன்று ...
கைபேசி நீ இல்லாமல் அணைந்து விட
கதிகலங்கி கையிழந்தவர் போல
பரிதவித்து போகிறார்கள்
இக்காலத்து பாலகர்கள்..
ஒரு நிமிடம் கூட ஒளிந்து
கொள்ளாதே
தள்ளி செல்லாதே
தவிக்க விடாதே...
ஒளியும் ஒலியும் வாழ
ஓயாது நீ வேண்டும்..
வழியும் வாழ்க்கையும்
யாகி விட்டாய் வையத்தாருக்கு..
அனையாதிரு இந்த