இவர்களின் ஊடல் முடிவதில்லை
இவர்களின் ஊடல் முடிவதில்லை
காலங்கள் ஓடி
கொண்டே இருந்தாலும்
இவர்கள் இருவருக்கும்
நடக்கும் ஊடல்
எப்பொழுதும்
முடிவதே இல்லை
மழை
அழுவதும்
சூரியன்
சிரிப்பதும்
வழக்கமாய்
நடந்து கொண்டுதான்
இருக்கிறது.
அதுவும் சில நேரங்களில்
மழை செய்யும்
அழிச்சாட்டியம்
இருக்கிறதே !
விக்கி விக்கி
அழுவதும்
இடையிடையே
விம்மி வெடித்து
அழுவதும் அப்பப்பா
ஆறுதலாய்
காற்றும் தடவித்தான்
கொடுக்கிறது
முறுக்கி சென்ற
சூரியன் சிரித்தபடி
தலையை நீட்டுகிறான்
மெளனமாய்
கதிர்களை நீட்டி
மெல்ல தொட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
அவளை ஆக்ரமித்து
விடுகிறான்.
இவர்களின் ஊடல்
இன்னும் கோடி
வருடங்கள் ஆனாலும்
முடிய போவதில்லை