எனக்குள் நீ❤

விழிமூடும் நொடிப் பொழுதிலு ம்யென்
விழிப்பா வையுள் மென் பாதம்
பதித்து ஜதியுடன் நர்த்தனம் புரியும்
நர்த்தகியே.....

இரண்டற கலந்து யென் மூச்சுடன்
எனை உயர்பித் திருக்கச் செய்து
யென் சுவாசம் கலந்த மென்
சுவாசக்காற்றே......

சுவாசம் நிறைந்த நீ எந்தன்
முத்து க்களில் முட்டிவி ளையாடி,
சிறுபிள் ளையாக சீண்டி விளை
யாடும் சின்ன பெண் நீ,
நீயூட்டும் கிளு கிளுப்பில் மனம்
நிறைந்து புன்னகை பூக்கச் செய்யும்
மென்னகையே......

என்னுள் படர்ந்து பரவிய நீயென்
இதயமெனும் சிம்மா சனத்தில் வீற்று
ராணியாக அதிகாரமாக கோலோச்சும் யென்
இதயராணியே.....

எனக்குள் எல்லா முமாக நீயே!!!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

எழுதியவர் : கவி பாரதீ (7-Oct-21, 2:09 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 1756

மேலே