காதல் நினைவே கண்ணே
அடிமறி மண்டிலக் கலித்துறை
பேறுபெ றுமங்கைப் பேணுதல்.செய்வர் எப்பொழுதும்
மாறுத லில்லை ஆறதன்.பூசை ஆலயத்தில்
மீறுத லில்லை.நின்னினை வையு மென்மனதில்
கூறுவர் மாற்றா.மூர்பல கண்ணே.நொந்திடாதே
வயிற்றுப் பிள்ளைக்காரிமீது எப்போதும் கண்வைத்துக் காப்பர்
ஆண்டவனுக்கு ஆறு கால பூசை தவறுதலில்லை
ஆறு வேளையென்ன எப்போதும் நினைவை மீறியதில்லை
ஊரார் பலத்தையும் மாற்றி சொல்வார் நம்பி நொந்திடாதே