நம் கண்முன்னே இறைவன்

ஒளிமயமான அருட்பெருஞ்சோதி இறைவன்
அருவமான ப்ரம்மம் அவனுக்கு உருவம்
உண்டா என்றால் ஏன் இல்லை உண்டு உண்டு
கண்ணனாய், சிவனாய் புத்தனாய் ஏசுவாய்
மண்ணில் நம்மிடையே வாழ்ந்து பண்பில்லா
வலியோரை வீழ்த்தி நல்லோரை வாழவைத்த
இவரெல்லாம் உருவொடு நமக்கு காட்சிதந்த
கடவுள்....இறைவன்......மனிதனாய் காட்சிதந்த
'அவன்' தான் இறைவன்....மனிதன் அல்லன்,
இதை அறிந்துகொண்டால் நித்தமும் நாம்
இறைவனைக் கண்டு மகிழ்ந்திடலாமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Oct-21, 8:55 pm)
பார்வை : 224

மேலே