காதல் குற்றவாளியாய்

உனக்கானவள் என்று
       வேரொருத்தி வந்துவிட்டால்  - நீ என்றும்
என்னவன் என்று
    நினைக்கக்கூட இயலாதே...
உன் மீது நான்கொண்ட
    காதலின் முடிவுரையால் - உன் பிரிவு
என் மீது நான் கொள்ளும்
    வெறுப்பின் முன்னுரையாய்...
உன் மீது தவறில்லை - உன்
    அன்பிலும் குற்றமில்லை
இதில்,
நானும், என் காதலும்
     மட்டுமே குற்றவாளிகளாய்...

எழுதியவர் : புவனேஸ்வரி (8-Oct-21, 3:42 pm)
சேர்த்தது : புவி
பார்வை : 46

மேலே