முடிவிலி அறைக்குள்
முடிவிலி அறைக்குள்
பற்றி எறிந்துக்கொண்டிருந்தது
கடவுளின் நாக்கு.
எரித்தது மனிதர்கள்
ஏங்கி தவித்தன
பேசமுடியாத
மனிதர்களின் மனசாட்சி
ஆசை அதிகரிக்க
மீண்டும் மீண்டும்
தேடிக்கொண்டே இருக்கிறார்கள்
கடவுள் எங்கே என்று
மனிதர்களுக்கு வேண்டுகோள்
அடுத்தமுறை
அவன் கண்களை எரித்துவிடுங்கள்
ஆற்றலை பயன்படுத்திய பிறகு
மிஞ்சிய கழிவுகளை மட்டும்
அவன் காண கூடும்…..