நவராத்திரிக்கு என் வேண்டுதல்

எப்படியோ எங்கோ ஒரு மூலையில்
சிதறிய சர்க்கரைத் துகள்கள் ....
எப்படி எங்கிருந்து வந்தது என்று
வந்த சுவடு தெரியாது சர்க்கரையை
மொய்த்திடும் சிற்றெறும்பு கூட்டம்.....
என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது...
சிற்றெறும்பிற்குள்ளும் மூளை வைத்தான் இறைவன்
அதில் 2 50000 நுண்ணிய செல்களுண்டாம் ......
இது என்ன அவன் படைத்த மைக்ரோ-சிப் ?

என்னுடைய கேள்வி இதுதான் .... படைத்தவன்
என்றொருவர் இல்லாது எப்படி இது சாத்தியம் ?

சிற்றெறும்பு முதல் யானை அதைத்தாண்டி
ஆறறிவு படைத்த மனிதன் வரை ...
படைப்பில் நாம் காண்பது இன்னின்ன வேலைக்கு
இன்னின்ன உறுப்பு/ அவையம்..... இவை எல்லாம்
தானாகவே படைத்துக் கொண்டனவா...??


இறைவா நீதான் இறைவன் இல்லை என்று
கூறும் மூட நம்பிக்கையருக்கு புதி புகட்டிட வேண்டும்

இதுவே இந்த நவராத்திரியில் நான் வைக்கும்
எந்தன் வேண்டுதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Oct-21, 5:33 pm)
பார்வை : 76

மேலே