சின்ராஜ்

காவலர்கள் பிடிச்சு போற ஆளு யாருடா?
@@@@
அதுவா பள்ளில நம்மகூட படிக்கிறபோது மாணவிகளைச் சீண்டுவானே அந்த சின்ன ராஜுடா. அவன் வீட்டில செல்லமா "சின்ராசு" -னு கூப்புடுவாங்களே அவனா?
@@@@@@
அவனே தான்டா.
@@@@@@
எதுக்கு அவனைக் காவலர்கள் பிடிச்சுட்டு போறாங்க?
@@@@@@
அவன் 'சின்ராஜ்' ஆயிட்டான்டா.
@@@@@@
என்னடா சொல்லற?
@#@#@@@
அவன் திருந்தவே இல்லடா. சாலையில் நடந்து போற பெண்கள்கிட்ட சில்மிசம் செஞ்சு அடிக்கடி பொதுமக்கள்கிட்ட மொத்து வாங்கியும் திருந்தவே இல்ல. அவனோட பொண்ணுங்க (இ)ரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிக் குடுத்துதான்டா. பேரக் குழந்தைகள் இரேக்கிறாங்க. அவன் மனைவியும் பலமுறை அவனை மொத்தியும் அவன் திருந்தாவே இல்லை. நேத்து தெருவில வெளையாடிட்டு இருக்கிற ஆரம்பப் பள்ளில படிக்கிற சிறுமிகள் இரண்டு பேரைமிட்டாய் குடுத்து ஏமாத்தி தனித்தனியா மறைவிடத்துக்கு அழைச்சிட்டு போயி வன்புணர்வு பண்ணின பாவிடா அவன். கொழந்தைங்க அழுதுட்டு போயி நடந்ததச் சொல்லியிருக்கிறாங்க. அதுக்குத்தான்டா அந்த 'சின்'ராஜை ('Sin'raj) காவலர்கள் கைதுபண்ணி கூட்டிட்டுப் போறாங்கடா.
@@@@@@@
ச்சே. அவனுக்கு தூக்குத் தண்டனை குடுக்கணும்டா. அயோக்கியப் பயல்.
#@#####
இல்லடா அரபுநாட்டு தண்டனை தான் கொழந்தைகளை வன்புணர்பு செஞ்ச அவனுக்கு தரணும். என்ன செய்யறது அதுக்கு நம்ம நாட்டு சட்டத்தில இடமில்லையே.

எழுதியவர் : மலர் (13-Oct-21, 6:30 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 62

மேலே