தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கணினிப்பணியாளர்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கணினிப்பணியாளர்கள் (தொ. மு.ச ) தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர்.


2021 அக்டோபர் 10 ஞாயிற்று கிழமை பன்னிரண்டு மணி அளவில், திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் 300 க்கும் மேற்பட்ட கணினிப் பணியாளர்கள் தி மு க வின் பிரதான தொழிற்ச் சங்கமான தொ. மு.ச என்று அழைக்கப்படும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இணைந்தார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி கொண்டிருக்கும் 250 திற்கும் மேற்பட்ட கணினிப் பணியாளர்கள், நெடுங்காலமாக எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் இந்த பணியை செய்துகொண்டு இருக்கிறார்கள், வயது முதிர்ச்சியாலும் வறுமையாலும் ஆட்கொள்ளபட்டு வேறு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள், பன்னிரண்டு ஆண்டுகளாக இவர்கள் தன்னிச்சையாக உரிமை கேட்டு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டு இருந்தாலும் யாரும் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது, ஆட்சி மாற்றம் நிகழ்ந்த அன்மை காலமாக புதிய முதல்வர் தமக்கு எதேனும் நம்மை செய்வார் என்ற நம்பிக்கையில் அனைத்து கணினிப் பணியாளர்களும் ஒன்றுகூடி கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் வேண்டி முதல்வருக்கு பல்வேறு மனுக்களை மின்னஞ்சல் மூலமாகவும் தபால் மூலமாகவும் அனுப்பி முன்னேறி கொண்டு இருந்தார்கள், இந்த நிலையில் திடீரென இவர்கள் அனைவரும் தி. மு.க தொழிற் சங்கமான தொ.மு. ச வில் இணைந்து இருப்பது ஏன் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்து இருக்கிறது.

கணினிப் பணியாளர்களின் செயலும், பேச்சும்.

கணினிப் பணியாளர்கள், கணினி மேற்பார்வையாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என்று 300 க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டு தங்களை தொ.மு.ச வில் இணைத்து கொண்டதாக தெரிகிறது, கணினிப் பணியாளர்கள் முதல்வரிடம் நேரில் சென்று தங்கள் நிலையைக்கூறி பணி நிரந்தரம் வேண்டலாம் என்ற முயற்சியில் இருந்ததாகவும், இந்த நிலையில் திடீரென இப்படி ஒரு நிகழ்வு நடப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மறுபக்கம் குழப்பமாகவும் உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது, பணியில் இருந்து உங்களை எல்லாம் நீக்க போகிறார்கள் என்றெல்லாம் அச்சத்தை அருமையாக விதைத்தது யாரென்று தெரியமால் புலம்பியவரையும் இங்கே சந்திக்க நேர்ந்தது. தொ.மு.ச வின் மாநிலத் தலைவர் திரு மா. பேச்சிமுத்து அவர்கள் சொன்ன பிறகுதான் இந்த இணைப்பு விழா கணினிப் பணியாளர்கள் பிரிவின் பொதுச் செயலாளரும் தலைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்து இருப்பது அனைவருமககும் விளங்கியது. மேலும் மேடையில் பேசிய கணினிப் பணியாளர்கள் தங்கள் நிலையை தெளிவாக எடுத்துரைக்க முடியாமல் குழறியது மேடைக்கு இவர்கள் புதிது என்பதை காட்டியது, வாழ்க்கையில் பிடிமானமில்லை, ஊதியம் சரியாக கிடைக்கவில்லை, வயது முதிர்ச்சி, குடும்ப வறுமை இவைகளை பேசினாலும் தெளிவாக பேச இயலாத நிலை அங்கு இருந்தது, இதனால் பன்னிரண்டு ஆண்டுகால கொடுந்துயர் குமுறலை அங்கு முழுமையாக இவர்கள் பதிவு செய்ய தவறிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தொ. மு.ச நிர்வாகிகளும், உரைகளும்.

அமைச்சர் திரு கே.என் நேரு அவர்கள் தனது சிற்றுரையை முடித்துக்கொண்டு கிளம்பியதும், விழாவில் கலந்து கொண்ட தொ.மு.ச நிர்வாகிகள் அனைவரும் சிற்றுரை ஆற்றினார்கள், தொ.மு.ச மாநிலத் தலைவர் மா. பேச்சிமுத்து அவர்கள் பணி நிறந்தரத்திற்காகவும், சம்பள உயர்வுக்காகவும், பணி பாதுகாப்பிற்காகவும் தொ. மு.ச தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று உறுதி அளித்தார், உங்களை பணியை விட்டு நீக்க முடியாது, நிரந்தரமான நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்களை வைத்து இருப்பது தவறு, எனவே, உங்களை பணி நிரந்தர படுத்துவதுதான் சரி என்று சட்டபடியான சில நம்பிக்கையான தகவல்களை கூறினார், இது அங்கிருந்த அனைத்து கணினிப் பணியாளர்களுமககும் அறுதலாய் இருந்தது.

தொ. மு.ச அகில இந்திய பொதுச் செயலாளர் திரு மு. சண்முகம் எம் பி அவர்களின் உரை.

1972 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர், ஜெனிவாவில் நடபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பெருமைக்குரியத் தலைவர் திரு மு. சண்முகம் எம் பி அவர்களின் உரை மிகவும் தெளிவாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது. ஆனால் அவர் பேச்சில் இருந்த ஆழமான உண்மைகளை எத்தனைபேர் புரிந்து கொண்டார்கள் என்றுதான் தெரியவில்லை. கணினிப் பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளது என்பதை புரிந்துகொண்டு அவர் பேசியது மெச்ச தக்கது, அதிலும் சூசகமாக சில அறிவுரைகளையும் அவர் வழங்கி இருக்கிறார்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்ற வள்ளலாரின் கருததை கூறி, தனித்து சிந்தித்து பார், உனது பணி நிரந்தரத்திற்கு, உனது உரிமைக்கு நீ என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக யோசி.

விழிப்புடன் இரு யாரிடமும் ஏமாராதே, நாம் செய்வது சரியா, இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? எதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி சிந்தித்து விழிப்புணர்வை பெரு என்றார்.

இதை அடைய வேண்டும், அதை பெற வேண்டும், இது நமக்கானது, என்ற உரிமை வேட்கையோடு துணிந்து களமாடு என்ற கருத்தை முழங்கினார்.

யார் எதை சொன்னாலும் நம்பாதே, நான் எதை எதையோ உளறி கொட்டுவேன் அவற்றை எல்லாம் அப்படியே ஏற்காதே, யோசித்து உன் புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய் என்று தந்தை பெரியாரின் கூற்றை கூறி கணினிப்பணியாளர்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார், அவர்கள் இனியும் விழித்து கொள்வார்களா என்று தெரியவில்லை. மேலும் நிறைய படிக்க சொன்னார், வாழ்க்கை பாடங்களையும் அது தந்த அனுபவங்களையும் படித்து, நாம் எப்படி தோல்வியுற்றோம், எங்கே தவறு செய்தோம் என்பதை ஆய்வறிந்த்து, அடுத்த கட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை புரிந்து செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்காமல் போகாது என்று கூறினார்.

இதிலிருந்து இவர் கணினிப் பணியாளர்களுக்கு என்ன கூற விழைகிறார் என்றால், உங்கள் பக்கம் வலுவான நியாயம் இருக்கிறது நீங்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால உங்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும், உங்களால் உங்கள் பணி நிறந்தரத்தை அடைய முடியும், யாரையும் நம்பி நீங்கள் ஏமாற வேண்டாம், குழப்பம் இல்லாமல் தெளிவாக செயல்படுங்கள் நிச்சயம் வாழ்வில் முன்னேறுவீர்கள் என்று அவர் கூறுவது அவரது நல்ல எண்ணத்தை அனைவருக்கும் அறியத்தந்தது. அவரை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் தன் ஆயுளை நீட்டித்து கொண்டு இருக்கிறது என்று கூறும் அளவிற்கு அவரது கருத்துரைகள் இருந்தது.

இனியும் கணினிப் பணியாளர்கள் என்ன யோசிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, தொ.மு.ச விடம் தஞ்சம் புகுந்ததுவிட்டோம் என்று நிம்மதியாக உறங்கினாலும் உறங்கலாம்.


---நிலாசூரியன் தச்சூர்
சமூக ஊடக முற்போக்கு எழுத்தாளர்
கடலூர் மாவட்டம் மேற்கு

எழுதியவர் : நிலாசூரியன் தச்சூர் (13-Oct-21, 8:28 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 46

மேலே