தேவர் முத்தேவரும் விதியில் தப்பார்

l
கலித்துறை






குறையாம் மதிக்கு கொஞ்சகொஞ்சம் தேய்ந்து போதலுமே
குறையாம் உடலில் உம்பரிந்தி. ரனுக்கு குறிதானே
குறையாம் பிரம்மன் ஓர்தலையும் குபேரன் குருடோர்கண்
குறையாம் சனிக்கு முடமாம்கால் விந்தை சராசரமே

சபித்தல் சகஜம் .அக்காலத்தில் கடவுளருக்கும் முனிகள் அல்லது அவர்களுக்குள்ளே
ஒருவருக்கொருவரோ சபிபபது சகஜமாய் இருந்தது.. அதனால் அவர்கள் அடைந்த
அவமானமும் துன்பமும் சொல்லி மாளாது. . ரோகினியின் காதலால் சந்திரனைத்
அழகிழக்க அவரின் மாமனார் சாபமிட எப்படியோ அது கொஞ்சம் கொஞ்சமாகள்
குறையவும் வளரவும் மாற்றியமைத்தார் கடவுள். கௌதம மகரிஷி கொடுத்த
சாபத்தால் இந்திரன் உடலெல்லாம் யோனிக்குறி உண்டானதாம். அதையும் பிறர்
காணக் கூடாதென மாற்றி யமைக்கப் பட்டது. ருத்ரனின் அந்தபுரம் நுழைந்த பிரமன்
தலை கொய்ய ஹத்தி தோஷத்தால் சிவன் பீடிக்கப் பட்டான்.. குபேரனின் காக்கை
உருவத்தில் .........தீண்ட நினைத்ததற்கு இராமனின் புல் ஆயுதத்தில் ஒரு கண்ணை
யிழந்தானென்பர். சாபம் விதியாக மாறி மார்ரலிலாது அனுபவிக்க நேரிடும்..

குறிப்பு:---
பாவலர் டாக்டர் தனது உரையில் தருமதீபிகை குறிப்பில் இதை விளக்கியுள்ளார்
வேண்டுவோர் அங்குசென்று விளக்கமாய் படித்தறியலாம்

எழுதியவர் : பழனிராஜன் (15-Oct-21, 3:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே