லூசு

என் தோழி
ஒரு கவிதை
எழுதினாள்.

"உன் தங்கை
கொடுத்து வைத்தவள்...
எப்போதும்
உன்னுடன் இருக்கிறாளே...!".

கவிதையை
படித்து விட்டு,
ஒரு அப்பாவி பையன்
கேட்டான்...
"அந்த பொண்ணு
லூசா..?
லூசுக்கெல்லாம் தலைவியா?..."

நான்
என் தோழியிடம் சொன்னேன்,
"அட...
இது காதல் பித்து
தலைக்கேறிய நிலை.
தங்கையாகிவிட்டால்,
அங்கே
காதல் எப்படி வரும்?.
என்னுடன் இருக்க முடியவில்லை
என்ற ஏக்கத்தை
இப்படியா சொல்லுவாய்...?.
சரி பரவால்ல...
கவிதையை
கிழிச்சு போட்ரு..."

"அட...
ஆமால்ல...
நான் இதை யோசிக்கவே இல்லை.
ஆனால்,
அப்டிலாம்
தங்கச்சின்னு
சொல்லிட்டு
நீ தப்பிக்க முடியாது....
கொன்றுவேன்.‌‌.."

என செல்லமாக
என் கழுத்தை பிடித்தாள்.
"அது எவன்
என்னை லூசு ன்னு சொன்னது...?",
என்றாள்
கோபமாக.

"அவன் ஒரு அப்பாவி...
அவனை விட்டுடு, பாவம்.."
என்றேன்.

"இல்ல,
அந்த அப்பாவிப் பையன
யாருன்னு சொல்லு.."
என்றாள்
கோபமாக...

"அந்த அப்பாவிப் பையன
வேறு யாருமில்லை...
அது நான் தான்..."

✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (15-Oct-21, 4:40 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : loosu
பார்வை : 184

மேலே