நல்ல நாடு

பாருகுள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
என்பது கவிஞரின் பாட்டு ! இதற்கான உயர்வான நாடு நல்ல நாடு என்று சொல்லுகின்றார் ஞானத்திலும் அன்னதானத்திலும், கானத்திலும் கவிதையிலும் உயர்ந்த நாடாம் நம் இந்தியா நாடு ஆகவே, இது உலகிலே மிக சிறந்த நாடாம்.

அவை மட்டம் அல்ல! புத்தரும் ,மகாவீரரும், யோகிகளும், ஞானிகளும் சிதாதர்களும் பிறந்து வாழ்ந்து, பல உபதேசங்களையும் தத்துவங்களையும் உலகிற்கே தந்து உயர்ந்த திருநாளாம்

விவேகமும், வீரமும் அறிவும், அங்கமும்,வன்மையும், தீண்மையு மிக்க மக்கள் பலர் வாழ்ந்து மறைந்த உன்னத நாடாம் நம் பாரத திருநாடு, ஆகவே, நம் நாடு பாருகுள்ளே நல்ல நாடாம். இது நம்காலத்திய கவிஞரின் கூற்று.


ஆனால் ஒரு நாட்டின் செழிப்பு
க்கு வளமிக்க நதிகள் தேவை! நதிகள் மிகுந்திருந்தால் மட்டும் போதுமா? நல்ல உழைப்பு தேவை அல்லவோ! உழைக்கும் மக்களின் உற்பத்தி செய்கின்ற பொருட்கள் யாவும் சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கப் பெற்றால் தான் அச்சமுதாயம் முழுமையும் பயன் பெறமுடியும் சமுதாயம் பயன் பெற்றால் தான் தனிமனிதனும் நன்மைக் காணமுடியும் வருமையின்றி வாழ முடியும். சாதரன மனிதன் பயன் பெற்று இன்பத்திலும் மிதந்து வாழ்க்கை ப் பயனை நுகர சமுதாயம் முழுமையும் நன்மை காண முடியும், அதுவே ஒரு வளமிக்க நாடு எனவும் நல்ல நாடு எனவும் கூறலாம்.

வேந்தர், சுவாமி விவேகானந்தர்,யேகிகள், சித்தர்கள் இவர்கள் பிறந்தது, வாழ்ந்து நல்ல தத்துவங்களையும் , உபதேசங்களையும் சொல்லிவிட்டு போனதில் மட்டும் ஒருநாடு உயர்ந்த நாடாக இருக்க முடியும். சொல்லி பொருமைப்பட்டு கொள்ளலாம்

அதனால் பல கோடி மக்களின் வாழ்வும் வயிறே திரும்புமா? எங்கு பார்த்தாலும் கொலை!கொள்ளை !திருடு சாதி பூசல், சமயப் பூசல்,இனப்பூசல், மொழி பூசல் ஐம்பது ஆண்டுகள் ஆகியும் ஒழிந்த பாடில்லை மே!

நாடு அமைதியாக வாழ முடியவில்லை; எங்குப் பார்த்தாலும் கேண்டுமாரி பொழிய காணேகிறோம் ! வெடிகுண்டு சப்தங்கள்! கிராமங்கள் வாழமுடியாவில்லை ! கீழோர் என்று செல்ல படுகின்றவர்கள் பயமின்றி தெருவில் நடக்க முடியவில்லை இப்படி பட்ட இழிய செயலில் போய் கொண்டிருக்கிறன ஒரு நாட்டை ஒரு நல்ல நாடு என்றும் எப்படி க் கூறுவது; எண்ணிப்பாருங்கள்! காரணம் என்ன என்பது கண்டு தெளியுங்கள்!

50 ஆண்டுகள் ஆகியும் சாதி ஒழிய வில்லை !சாயம் பூதல் ஒழிய வில்லை!கல்வி! கிடைவில்லை ஆண்டவன் அடிமை தீர்த்தப்பாடில்லை ! ஊருக்கு இன்பம் தரும் உழவன் நிலை உயரவில்லை! ஆளுகின்ற நிலம் சொந்தமில்லை!

எல்லோருக்கும் நீதி! எல்லோருக்கும் சமவாய்ப்பு ! எல்லோருக்கும் கல்வி உறைவிடம்! எல்லோருக்கும் உணவு இவையாவும் மனித சமுதாயத்திற்கு கிட்ட வில்லை ! அமைதியாக வாழ முடியவில்லை. எப்படி ஒரு நாடு உயர்ந்த நாடாக இருக்க முடியும் அத்தனையும் கிடைத்து.எல்லோரும் இன்புற்று அமைதியோடு வழ்வதினால் மட்டுமே மக்களிடம் நல்ல குணங்கள் பொற்று, ஒரே வரை ஒருவர் மதித்து வாழ்ந்தால் அல்லவோ ஒரு நாடு நாடாக இருக்க முடியும்!இதோ ஒரு சங்கத்தால் புலவர் செல்வதைக் கேழ்ப்போம்!

நாடு ஆகு ஒன்றோ! காடே ஆகு ஒன்றோ
அவல் ஆகு ஒன்றோ!மிசை ஆகவே ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை! வாழிய நிலனே!

ஒ நாடே! நீ நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும்.மேடாக இருந்தாலும் கவலை இல்லை, ஒரு நாட்டில் எங்கு மக்கள் நல்லவர்களாக வாழ்கிறார்களோ, இருக்கிறார்களோ அங்கேதான் நாடு நல்ல நாடாக இருக்க முடியும் என சங்ககால புதல்வரான ஔவையார் கூறுகிறார,சிந்திப்பார்களா?

எழுதியவர் : இராகு (15-Oct-21, 7:46 pm)
Tanglish : nalla naadu
பார்வை : 3494

சிறந்த கட்டுரைகள்

மேலே