கறுப்பழகி

கறுப்பழகி.

வெள்ளைப் பருத்தி
கறுத்தக் கொட்டை,
என் ஒருத்தி
கறுப்புப் பருத்தி.

முடியில் இருக்கும்
மல்லிகைக் கொத்து,
மயக்கி இழுக்கும்
என் மனத்தை.

கண்களில் துள்ளும்
இரண்டு மீன்கள்,
துள்ள வைக்கும்
என் இதயத்தை.

கட்டி வருவாள்
சிவப்புச் சேலை,
அம்மன் அழகு
சொல்வதற்கு.

சிரித்திடுவாள் - தன்
முகத்தின் நிறம்
சொல்வதற்கு.

சிரித்துவிட்டு,
சென்றிடுவாள் - என்
சிந்தனையை
சீண்டி விட்டு.

சிதறியது என்
இளமை - இந்தக்
கறுப்பழகியை
நினைத்து நினைத்து.

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (16-Oct-21, 4:41 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 321

மேலே