அன்பு தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீலக் குறிஞ்சியும்
நீயும் ஒன்றாய் துளிர்த்ததேன்...
நீயும் நீலக் குறிஞ்சியும்
இவ்வுலகில் அபூர்வம் என்பதாலோ...
தத்தி தவழ்ந்த வயதில்
பூமிக்கு நீ கொடுத்த முத்தங்களை..
பூமி சொல்லும்
நட்சத்திரங்களுக்கு கதையாய்...
விளையாட்டுப் பருவத்தில்
நீ பேசிய மொழியெல்லாம்..
குயில்களுக்கு காற்று
பரிசளிக்கும்....
பூப்படைந்த நாளில்
உன் மேல் விழுந்த
மழைத் துளிகள்..
மேகம் வழியே
பூக்களுக்கும் உன் வாசம் பரப்ப..
புது உலகம் படைக்கும்
கல்லூரி பருவத்தில்..
நெருப்பை கூட
நேசிக்கும் உன் மனதை...
ஒளியாய் விரவச் செய்கிறதே
நெருப்பு...
இன்று
இருபத்தி நான்கு வருடம்
உன்னை வேடிக்கை பார்த்தே..
மழைக் கவிதைகளை படைத்த
வானம்..
அத்தனையும் உன்னை வாழ்த்த...
நானும் உன்னை வாழ்த்த...
நீலகுறிஞ்சியும் பொறாமை கொண்டு உன்னை வாழ்த்த...
அன்பு தோழிக்கு
அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 10:48 pm)
பார்வை : 6641

மேலே