வெள்ளாளன் மகன்

கல்விகளை கற்று
கானகம் மறந்தே
கணிபொறிக்குள்ளும் கண்ணாடிக்குள்ளும்
ஒளிந்திட்டையாட வெள்ளாளன் மகனே
என்று உழவு கலப்பை வினவ
வெள்ளாளன் மகனோ
பொருள் தேடி நகர் சென்று
இறுமாப்பு கொள்ளும் மானிடர் பலர்
நான் அவ்வகை இல்லை கேள் கலப்பையே
என் முப்பாட்டனின் ஏர் துருவேறியதில்லை
என் பாட்டனின் பட்டறைகள் தீர்ந்தபாடில்லை
என் தாத்தானும் அப்பனும்
வரவு நாலு காசு செலவு ஆறு காசு
என்றே கதிர் அறுத்தான்
இந்நாளோ கோவே மாய்க்குது எம்மை..
ஊதியம் பெறு நாள் போய்
ஊதியம் தரு நாள் வரும்...
என் வெள்ளாள பெருங்குடி முப்பாட்டன்
தோள் சுமந்த கலப்பையே..
உன்னை மறவேன் என்று நினைத்தாயோ....

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 10:43 pm)
பார்வை : 532

மேலே