சருக்கரை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அருந்து மருந்திற்(கு) அனுபான மாகப்
பொருந்துமடல் வாந்திபித்தம் போக்கும் - வருந்தருசி
நீக்கும் அதிகபத்தை நீற்று மகிழ்ச்சியையுண்
டாக்கு நறுஞ்சர்க்க ரை

- பதார்த்த குண சிந்தாமணி

சருக்கரை மருந்துகள் உண்ண துணை மருந்தாகப் பயன்படும்; வாந்தி, பித்தம், ருசியின்மை இவற்றைப் போக்கி, கெட்டிப்பட்ட கபத்தை இளக்கி மகிழ்ச்சியை அளிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-21, 8:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே