மசுகு-வின் - முதலாய் இரு அல்லது சிறப்பானவனாய் இரு Be First or Be Better

[ம.சு.கு]வின் : முதலாய் இரு (அல்லது) சிறப்பானவனாய் இரு (Be First or Be Better)

அதிர்ஷ்டத்தில் வருவதல்ல வெற்றி. எவறொருவரும், தன் தொடர்முயற்சியால் வெற்றியை படைக்க வேண்டும்.

மாறாய் தோல்வியென்பது, எதுவுமே செய்யாமல் இருந்தாலே தானாக நிகழ்ந்துவிடக்கூடியது.


ஒரு தோட்டத்தில் மலர் செடிகள் பூத்துக்குழுங்க வேண்டுமாயின், நல்ல விதைகளை நட்டு பராமரிக்க வேண்டும். ஆனால் களைகள் முலைப்பதற்கு நாம் எந்தவொரு வேலையும் செய்ய வேண்டியதில்லை. அவ்வாறே, வாழ்வில் வெற்றிபெறுவதற்கும், நாம் ஆக்கப்பூர்வமான செயல்களை தொடர்ந்து செய்யவேண்டியதும் முக்கியமாகிறது.


ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தால் தான் வெற்றிகிட்டும் என்று எல்லோருமே அறிவர். ஆனால் அந்த செயல்கள் என்னவென்ற கேள்வி எல்லோர் மனதிலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.


முதலிடத்தைப் பிடிக்க:


தேர்வில் வெற்றிபெற பாடங்களை தொடர்ந்து படித்திட வேண்டும். அதே தேர்வில் முதல் மாணவனாய் வெற்றிபெற புத்தகம் கிடைத்த நாள்முதல் தொடர்ந்து படிக்க வேண்டும். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை, கூடிய விரைவாக ஆசிரியரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். தெளிவான அறிவும், தொடர் முயற்சியும், கட்டாயம் முதலிடத்தை பிடிக்க வழிவகுக்கும். ஒரு குறிப்பிட்ட பாடத்தை முடிக்க எல்லோருக்குமே குறைவான நேரமே இருக்குமாயின், யார் அதை முதலில் துவக்கி செவ்வனே செய்கின்றனரோ, அவரே வெற்றி பெறுவர்.


காலம் தாழ்த்தித் துவக்கினால்,

· நேரமும் போதாது,

· கூடுதல் மன அழுத்தமும் இருக்கும்.

· செய்கின்ற வேலையை திறம்பட செய்து முடிக்க இயலாமல் போகும்.

தாமதமாயினும் தரமே நிலைக்கும்:


நீண்ட காலம் நிலைக்கும் செயல்களில், சற்றே மாறுபட்ட தன்மை இருக்கிறது. உதாரணத்திறிகு; ஏதேனும் ஒரு புதிய கலையை எடுத்துக்கொள்வோம். அந்த கலையில் முதலில் தடம் பதித்தவருக்கு பெரும் பாராட்டுகளும் செல்வமும் கிடைக்கும். அதே கலையில் பின்னாலில் வந்து பெரும் செயல்களை புரிந்தவர்களும் பெரும் பேரடைகின்றனர். காலப்போக்கில் அரும்பெரும் சாதனைகளை படைத்தவர்கள் மட்டுமே வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள்.


இசையை கண்டுபிடித்தவர் யாரென்று நமக்கு தெரியாது. யார் முதலில் வல்லுநராயிருந்தார் என்பதும் தெரியாது. ஆனால் என்றும் அழியாத கீர்த்தணைகளை இயற்றிய தியாகராஜரையும், பீத்தோவனையும் இசையுலகம் என்றும் மறப்பதில்லை. முதலில் வந்தவர்தான் வெற்றிபெறுவார் என்றில்லை. பின்னர் வந்தாலும், மேம்பட்ட திறமையுடன், சிறப்பாக செயல்பட்டு சாதித்தவர்களும் நிலையான புகழை எய்துகின்றனர்.


எண்ணற்ற விடயங்களுக்கு, எப்போது உள்நுழைய வேண்டுமென்று உலகம் பல வழிமுறைகளை வகுத்துக்கொண்டே வருகிறது.


வர்த்தக உலகம்:


வர்த்தக உலகத்தில் எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. பல மேடைகளில் வழக்கமாக குறிப்பிடப்படும் அமேசான் மற்றும் ஜில்லட் நிறுவணங்கள் முதலில் நுழைந்து முதன்மை நிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு உதாரணமாகவும், கூகுள் மற்றும் வாட்ஸப் நிறுவணங்களை தாமதமாக வந்தாலும் தரமான சேவைகளினால் முதன்மைநிலையை அடைந்து தக்கவைத்ததற்கும் உதாரணமாக குறிப்பிடுவதை எல்லோரும் அறிந்திருப்பர்.


முதலாய் நுழைபவர்களுக்கு, பெரும் சாதகமான விஷயம் யாதெனில், போட்டிகள் குறைவு. சில சமயங்களில் அதுவே பாதகமாய் போகக்கூடும். போட்டியிருந்தால் தொடர்ந்து சேவையை மேம்படுத்தும் முயற்சி இருக்கும். போட்டியில்லாதபோது, சில சமயம் மந்தநிலை ஏற்பட்டு சீரழிவிற்கு வழிவகுக்கும். முதலில் நுழைபவர்கள் எண்ணற்ற சறுக்கள்களையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். முன் அனுபவம் இல்லாத காரணத்தால் பல முடிவுகள் தவறானதாக போகக்கூடும். எந்தநிறுவணம் தவறுகளை வெகு சீக்கிரத்தில் சரி செய்து தன்னை மேம்படுத்திக்கொள்கிறதோ, அந்த நிறுவணம் தொடர்ந்து முன்னிலை வகிக்க வாய்ப்பு அதிகம். தன்னை மேம்படுத்திக்கொள்ளாத நிறுவணங்கள் காலப்போக்கில் காணாமல் போகின்றன.


அமேசான் நிறுவணம் முதல்முதலாய் புத்தகங்களை இனையத்தில் விற்க முயற்சித்தது. புதுமையான முயற்சி. அன்றைய காலகட்டத்தில் இனையத்தின் பயண்பாடு சற்று குறைவுதான். ஆனால் இனையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அந்த நிறுவணமும் தன்னை மென்மேலும் உயர்த்திக்கொண்டு இன்று உலகளவில் இனையவர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. முதலில் எண்ணற்ற நஷ்டங்களை சந்தித்தாலும், இன்று சாதித்துக் காட்டிவிட்டது.


இதற்கு நேரெதிறாக, இனையத்தில் தேடுதல் சேவையை முதலில் வழங்கிவந்த “LYCOS” போன்ற நிறிவணங்கள் ஒழிந்துவிட்டன. பின்னர் தொடங்கிய “Google” இன்று தன்னிகரற்ற நிறுவணமாக வளர்ந்து நிற்கிறது. “Google”ன் தேடுதல் முறை, முந்தையவற்றை விட வேகமாகவும், மேம்பட்டதாகவும் இருந்தது. தொடர்ந்து பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்தது. முதலில் துவங்கிய நிறுவணங்கள் மூடப்பட்டு, பின்னர் வந்த நிறுவணங்கள் தங்களின் தரத்தினாலும் தொடர்ந்த மேம்படுத்தப்பட்ட சேவையினாலும் முன்னிலை பெற்று தொடர்கிறது.


இதே சூழ்நிலைகளில் நாம் வெற்றி பெற்ற நிறுவணங்களின் கதைகளுக்கு நேரெதிராக எண்ணற்ற நிறுவணங்கள் தோல்விகண்டுள்ளன. ஏன் அவர்கள் தோல்விகான நேர்ந்தது என்று அறியாமல் போனால், நம்மால் வெற்றியை உறுதி செய்வது சற்று கடிணமாகிவிடும்.


சந்தையின் தேவை என்ன?


புதிய பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றிபெற எண்ணுபவர்கள், முதலில் அந்த பொருளுக்கான மக்களின் தேவையை பற்றி அறிந்திருக்க வேண்டும். நம் புதிய கண்டுபிடிப்பு மக்களுக்கு உபயோகமானதா என்று அலசியாராய்ந்து, அதன் தேவையை கணக்கிட்டு பின்னர் இறங்கினால்தான் அந்த தொழிலில் நாம் வெற்றிபெற முடியும். நம் சொல்வழக்கில் உள்ள உதாரணம் இதை நன்கு தெளிவுபடுத்தும் ‘எல்லோரும் தாடி வளர்க்கும் ஊரில் சவரக்கடை திறந்தால் நட்டமே’.



நம் தனித்துவம் என்ன?


அதுபோல, ஏற்கனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும் சந்தையில் நாம் புதிதாய் நுழைந்தால், பிறர் பொருளுக்கும் நம் பொருளுக்கும் ஏதேனும் மேம்பட்ட தன்மை இருக்கிறதா என்று நாம் அலச வேண்டும். மற்றவர்கள் தரமற்ற பொருட்களை விற்கின்றபோது, தரமான பொருளை அவர்களின் விலைக்கோ, அல்லது சற்றே அதிகமாகவோ கொடுத்தால், சந்தை ஏற்றுக்கொள்ளும். அவ்வாறில்லாமல், எல்லோரைப்போல சாதாரண பொருட்களை கொடுப்பதானால், போட்டி நிறைந்த சந்தையில் வெற்றிபெறுவது சாத்தியமற்றுப்போகும். நாம் தாமதமாய் நுழைபவராயின், நமது பொருளிலும், சேவையிலும் மேம்பட்ட தன்மை இருத்தல் வேண்டும். அந்த மேம்பட்ட சேவை மக்களின் உபயோகத்தில் அவர்களின் பனிச்சுமையை குறைப்பதாகவோ, எளிமைப்படுத்துவதாகவோ இருக்க வேண்டும்.



உதாரணத்திற்கு, சில காலம் முன், கால்டேக்ஸி சேவை வந்தது. ஒரு எண்ணை ஞாபகம் வைத்து அழைத்தால் வாகனம் வரும். இன்று “OLA” “UBER” என்று இரண்டு புதிய செயலிகள் வாகனச்சந்தையை புரட்டிப்போட்டுவிட்டன. அவர்களின் மேம்பட்ட சேவை, எளிமையான பயன்பாட்டுமுறை, அவர்களை வாடகை வாகன சேவையில் முதல்நிலையை தக்கவைக்க உதவுகிறது.


எப்பொழுது துவங்கினோம் ? எப்படி செய்கிறோம் ?


வர்த்தக உலகத்தில் மட்டுமல்ல, இதே நிலை நம் அன்றாட வாழ்க்கையிலும் தொடர்கிறது. உறவுகள் மேம்பாட்டிலும், உடல் நல பராமரிப்பிலும், இன்னும் எண்ணற்ற இதுபோன்ற விடயங்களிலும், நாம் முதலில் களமிறங்கி செவ்வனே செய்தல் வேண்டும். முதலில் வரமுடியாது தாமதமாயின், தரமான மேம்பட்ட முறையில் இயங்கி எல்லாவற்றிலும் வெற்றியடைய வேண்டும்.


உடல்நலத்தை பராமரிக்க, சிறுவயது முதலே உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருபவனும் வெற்றிபெறுகிறான். சற்று வயதானபின் உடற்பயிற்சியை துவக்கினாலும், தொடர்ந்து உணவுக்கட்டுப்பாடு, சிறப்பான பயிற்சிகளின் மூலம் நல்ல உடல் கட்டமைப்பைப் பெற்று வெற்றிகொள்கிறான்.


எங்கும், எதிலும் நாம் நுழைகின்ற நேரம் முக்கியமானது. அதேபோல் நுழைகின்ற விதமும், தொடர்கின்ற செயல்களும் நம் வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முக்கியமானதாகும்.

- [ம.சு.கு]
www[dot]palakkavalakkam[dot]com
palakkavalakkam[at]gmail[dot]com

எழுதியவர் : ம.சு.கு (20-Oct-21, 10:02 pm)
சேர்த்தது : மசுகு
பார்வை : 73

மேலே