சில சொற்கள் - சிலருக்கு - குறள்வெண்செந்துறை

காற்றில் கலந்து வருகிற நாற்றம் தெரிவதில்லை
தூற்றும் பழிச்சொல் என்றும் நம்மையும் மறிப்பதில்லை

ஏற்றம் பெறவே உழைப்போர் தோல்வியால் துவளுவதில்லை
கூற்றம் கூப்பிடும் வரையில் புறங்கூறல் மாறுவதில்லை

பரம்பரை பழக்கம் படிப்பாலும் அறவே போவதில்லை
தரமுள்ள நிலத்தை எளிதில் சிதைப்பவன் வாழ்ந்ததில்லை

அறமிலா செயலால் சேர்க்கும் திருவது செழிப்பதில்லை
சிறிதளவு ஆர்வமின்றி முயலும் காரியங்கள் நடப்பதில்லை

தேய்ந்த வழியில் செல்லுவோர் இன்னலில் மாட்டுவதில்லை
ஓயும் பொழுதுதவ சேர்க்கா பொருளால் நன்மையில்லை

உரிய விலைக்கு அதிகமாய் விற்போர் வளருவதில்லை
அரிதான மனிதரின் சொற்களை உலகம் ஏற்பதில்லை

கபடம் சிற்சில ஆண்டுகள் மட்டுமே வாழவைக்கும்
கபத்தால் மாற்றம் ஏற்பட்டால் ஆயுள் குறையும்

மதுவின் போதை குடிப்பவன் குடும்பத்தை சுவடழிக்கும்
மதத்தால் குறைந்த சகிப்பு பெரிய போரையாக்கும்

திரையின் படங்கள் நீரின் குமிழியாய் பலனைத்தரும்
திரவியம் பெருகும் நபரின் குணமது தேளாகும்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Oct-21, 10:36 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே