நிரந்தரமில்லை

நிரந்தரமில்லை

நிரந்தரமில்லை
தெரிந்தும்

நிம்மதி இன்றி
தவிக்கின்றோம்

சேர்த்து வைத்தது
எதுவும் சேராது
தெரிந்தும்
ஏனோ

சேர்த்து வைக்க
முயற்சி செய்கிறோம்

வாழ்க்கையின்
பின்னால்
நினைத்து
முன்னர் வாழ்வை
இழந்து போகிறோம்

அறிவில் ஆறை
கொடுத்து
இப்படி அல்லல்
பட வைப்பதுதான்

இந்த இயற்கையின்
விளையாட்டோ !

மனிதனை தவிர
மற்றவை எல்லாம்
இதை தெரிந்து
கொண்டு

பிறப்பின் வாழ்க்கை
ஒரு நொடி
என்றாலும்

இருந்து அனுபவித்து
சட்டென மறைந்தும்
போகிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Oct-21, 11:37 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nirantharamillai
பார்வை : 151

மேலே