அவள் அழகு

விண்ணில் வந்துபோகும் வானவில் காட்டுவது
நிறபேதம் இயற்கையின் தனி விளையாட்டு
சபையில் பாடும் பாடகன் வாய்ப்பாட்டால் காட்டுவது
சுரபேதம் அதில் வரும் ராகம் ஒவ்வொன்றும்
தனி அழகில் கேட்போர் செவிக்கு விருந்து

என்னவள் அழகு அங்கம் அங்கமாய் தனிஅழகாய்
காண்பது அழகு பேதம் அவளுக்கே உரித்தானது
என் கண்களுக்கு அது என்றும் விருந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Oct-21, 7:56 pm)
Tanglish : aval alagu
பார்வை : 205

மேலே