அவள் என்கிற பதம்

அவள் என்கிற பதம்
திகட்டாத கவிதை

நெஞ்சம் நிமிர்ந்து
நோக்கும் குணம்
என்கிற அவள் பதம்
திமிரான கவிதை

கண்கள் விரிய
முறைக்கும் கோபம்
என்கிற அவள் பதம்
தீரா காதல் கவிதை

உதடுகள் செழித்து
உறவாடும் முத்தம்
என்கிற அவள் பதம்
போதை தரும் நித்தம்

இடையின் நளினம்
அசைந்தாடும் கொடி
என்கிற அவள் பதம்
வலைவீசும் உயர்ரகம்

கால்கள் தரையில்
மிதக்கும் காற்று
என்கிற அவள் பதம்
குழந்தையின் உதை
தாங்கிடும் நெஞ்சம்

அவள் யாரென
நீங்கள் கேட்டால்
அவள் யாரோ தெரியாது
என நான் சொன்னாலும்

உப்பு கரைந்தாலும்
கற்பின் குணம் மாறாது
என்கிற அவள் பதம்
மீண்டும் மீண்டும் படித்துப்
பார்க்க தூண்டும் கவிதை...

எழுதியவர் : மேகலை (21-Oct-21, 11:10 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : aval enkira patham
பார்வை : 165

மேலே