எமக்கும் பெருமையே
எமக்கும் பெருமையே!!!
உமக்கு வாழ்த்துகள்🎉🎊 சொல்ல!!!
இந்த நன்னாளில் வாய்க்கூறி
வாழ்த்தவோ வாய்ப்பில்லை!!!!
சங்க மலர் மாலைகளை தொடுத்தனுப்ப!!!!
அம்பும் இல்லை!!!
வில்லும் இல்லை❌❌
உன் ஆழ்மனதோடு உலாவி
கைகளை குலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளவோ !!
ரேகைகள் யாவுமே!!
இலகுவாய் மிதக்குதே!!!
வம்பிழுக்க வார்த்தைகளோ
(நீ)ஆளில்லாமல்
தனிமை எனும் எழுத்துகளோடு தவித்து கொண்டிருக்கிறது!!!!!
பல குரலெடுத்து வந்த வாழ்த்துகளெல்லாம்
வரிசை கட்டு நிற்க,,,
மூச்சடிக்கி தந்த பொருட்கள் யாவும்
நீ
திறக்க பரிதவிக்குதே(டி)!!!!!!
மாறிவரும் தரணியில் தாமதமாய் எம் வாழ்த்துகள் கிடைக்க பெற்றா(லும்)லோ !!
எம்
ஒற்றை சொற்களுக்காக
உம்
செவிமடல்கள் காத்திருக்குமென்று!!
இமைகளை ஆவேசமாய் அசைத்து சொல்வேனே!
கர்வம் மிட்டு சொல்வேனே!!!
இணையில்லை என்று!!!!
எம்
இதழ்சுவைகளை இசைத்து (பிழிந்து) மற்றுமொருமுறை
சொல்வேனே !!
பிறந்த நாள் 🎉🎊🎉🎊வாழ்த்துகளை!!!!!!
பிறந்தாய்
உன் பிறப்பினால் அந்நாளுக்கும் ஓர் பிறந்த நாள் என்ற புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்து கொண்டனவே!!!!!!
வாழ வேண்டுமடி
இவ்வையகம் வழி மாறாமல் இருக்க!!!!
வாழ வேண்டுமடி இப்பூவுகில் பரிசுத்த மலர்கள்🌸🌺🌻🌹🌷🌼💐 பூப்பதற்கு !!!!
கோடி ஆண்டுகள் கடக்க வேண்டுமடி
உம்
ஃ இல்லா சிரிப்பொலிகள்!!!
தோழமையோடு நான் இருப்பேன்
உனது தெம்பில்லா நாட்களை உடைக்க!!!!
உன்னுள் சூழும் சோகமய சொற்களை
சுமந்து சோர்வு அடைய யாம் இருப்பேன்!!!!
போதும் என்ற சொல்லால் முடிக்கவா!!!!!
இல்லை
பொறுத்திருந்து
பொருமை இழந்து
மறுபடியும் முதல் சொற்களில் இருந்து ஆரம்பிக்கவோ!!!! ( சொல் நீயே)
என் இனிய தோழிக்கு!!!
இனமான தோழன் தொடுக்கும் தொய்வில்லாத இந்த வாழ்த்து மடல்
இப்படிக்கு
தோழமை