காதலும் நேரமும்

ஓடுகின்ற கடிகாரம்
ஓடாமல் நிற்பது போன்ற
உணர்வு நீ வரும்வரை ....!!

நீ வந்தவுடன்
ஓடாத கடிகாரமும்
உயிர் பெற்று
ஓட ஆரம்பித்து விடுகிறது...!!

கால நேரம் பார்த்து
காதல் வருவதில்லை
என்பதும் ...!!

கால நேர கட்டுப்பாடு
காதலுக்கு இல்லை
என்பதும்
நிஜம் தானே ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Oct-21, 9:05 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 208

மேலே