கிளியோபாட்ரா

அழகு


ஆண்டவன் படைப்பில் அத்தனையும் அழகு
ஒருவனுமில் லைசொல்வேன் டாலமி சீசருடன்
ஆண்டனி கணவராம் பாம்பி லெப்பைடிஸ்
அகஸ்டஸ் வரையில் எண்ணத்தில்
தடுமாற்றம் மயக்கம் கிறக்கமாய் திரிந்தாரே



நல்லப் பாம்பின் விரிப்பட மழகு
கொல்லும் ராஜநா கமெழ வழகு
விரியன் விரையா நகர்வு மழகு
வேங்கைப் பதுங்கிப் பாய வழகு
சீரிப் பாய சிறுத்தை அழகு
அசைந்தா டவத்தனை ஆனை அழகு
கவருருட் டுக்கண் னணங்குடை யசைவு ம்
காமக் கொடூரம் அழகு
அனுமுதல் பிரம்மாண் டமெல்லா மழகே

எழுதியவர் : பழனி ராஜன் (26-Oct-21, 12:41 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 132

மேலே