கோவை இதழ் கொண்டு கொய்யாதே

பைங்கிளி அலகு பட்ட அத்திப்பழம் போல சிவப்பழகி அவள் நாணி சிவந்தாள் என் விழி பார்வையில்

கொஞ்சும்கிளி கொத்திய கோவைப்பழ இதழ் கொண்டு யாரும் கொய்யா யென் மனதை கொய்தாள்

உச்சிவெயிலில் குச்சிஐஸ் ஆக கரைந்தேன் கட்டழகியின் கண்ஜாடையில்

நாவல் பழம்தின்ற நாக்குபோல் நமநமவென்று குறுகுறுத்தது யென்மனம் அவள்சினுங்கல் கண்டு

அந்தஅவள் வேறு யாரும் அல்ல...
யென் கனவில் என்தூக்கம் கலைத்த





.....

யென்றால் நம்பவா போகிறீர் ...ஆம் ...அவள்
யென்கனவு கன்னி தான் ....

எழுதியவர் : பாளை பாண்டி (26-Oct-21, 6:00 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 191

மேலே