வாசல் வந்த வான்மதி
அவளை காணாமல் நான் தூங்கியதில்லை ... காணாத நாள் எனக்கு விழிப்பே அதிகம் ...மாறாது நான் அவள் மேல் கொண்ட நேசம்
வாசல் வரை வருவாள் வந்துயென்
வாட்டம் நீக்கிட யெனை நோட்டம் இடுவாள் வரம்புமீறி சாளரம் வழி...
விழிகொண்டு வழிவேன் வழியின்றி
என்மேல் அவள் வைத்த. அன்பு அளப்பரியது ...அளவிட அளவு ஏது...
மழையில் மறைந்து பார்த்தாள் ... மாறாத சிரிப்பழகி... வட்ட வடிவழகி
வட்டமுகத்தில் வடுக்கள் இருந்தாலும்
அழகுசாதனம் வேண்டாம் வஞ்சிக்கு
கொஞ்சி பேசுவாள் அஞ்சாத குமரி...
அவள் அழகில் ஒரு மாதிரி....
பால்வண்ண முகங்கொண்டு நீல்வண்ண உடைஉடுத்தி மின்னும் மீன்கள் இடையே நடைபயிலும் நங்கை அவள் அழகை காண
வேண்டும் கண் கோடி... இதனை கண்டவர் கோடி...ஆயினும் அவள்நாடி வருவது ...எனைத்தேடி
ஓடிவந்தேன் வாசல்தேடி...
அன்பின் வரவை அள்ளிபருகிட..
வந்தவள் பெயர் வான்மதி...
அவள் என்றுமே வானத்தில் மதி...
அகத்தில் எனக்கு அவளே கதி..
அன்பே வா...ஆறுதலே வா...
வாசல் வந்த வான்மதியே வா...
முழுநிலவே வா...பிறைநிலவே வா..
பிரியாத வரம் தா ...யென் அன்பே