உலகத் தந்தை - 3

தேவ மைந்தன் நீரே
பூமிக்கு வந்தது தான்
ஏனோ
மரியாளின் மைந்தனாய் வந்து
மனிதருள் மனிதனாய் வாழ்த்து
தனியாத மனிதனின் பாவத்தை
அணிந்து பலியான தேவனே
பாவத்தின் சம்பளம் மரணம் அது
பாவிக்குத் தானே
இந்த சாமிக்கு ஏனோ
எங்களின் பாவத்துக்காக
உங்களை பலியாக்கிக்கொண்டு
எங்களை காத்த ஈசனே
கொடியென வளர்ந்த என்
கொடும் பாவத்திலிருந்து
அடியேனை மீட்ட அன்பு
தெய்வம் நீரே

எழுதியவர் : சுந்தர் (31-Oct-21, 6:12 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 51

மேலே