அம்மா இசைமாலை (oli mayamaana ethirkaalam mettu)

(ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்ற மெட்டில் பாடவும்)

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில்
தெரிகிறது
என் அன்னை என்னை நாளும் நாளும்
காத்தருள் புரிவதாலே (ஒளிமயமான)

குக்குமச் செல்வி மங்கள மகளே
குலமகள் என் தாயே

உன்னைப் போற்றிப் பாடும் எங்களைக் காத்தே
நாளுமே அருள்புரிவாய்
பாமலர் சூடி பூமலர் தூவி
பதமலர் போற்றிடுவேன்

வாழ்க மகள் என் தினம் தினம் நீ என்னை
வாழ்த்தி அருள்புரிவாய் (ஒளிமயமான)

சரணங்கள் பாடி சரணடைந்திடுவேன்
உன் மலர் பதங்களையே
என்றும் சாந்த தயாபரி சகல நலம் தரும்
சௌந்தர்ய ரூபிணியே

சகலமும் நீயே சஞ்சலம் போக்கி
சங்கடம் தவிர்த்திடுவாய்

சர்வ மங்களமும் நாளுமே நல்கி
சந்ததம் காத்தருள்வாய் (ஒளிமயமான)

எழுதியவர் : ஸ்ரீ G S விஜயலட்சுமி (29-Sep-11, 7:07 pm)
பார்வை : 404

மேலே