நிலையில்லா வாழ்க்கை

தேன் சுவைக்கும் ஆனால்
அதன் சுவை நிலைக்காது
மது போதை தான் ஆனால்
அந்த போதை நிலைக்காது
மலர் மணக்கும் ஆனால்
அதன் மணம் நிலைக்காது
மனிதன் ஈட்டும் அநியாய
வருமானம் சுகம் ஆனால்
அது நிலைக்காது
நிம்மதி கிடைக்காது
மனித பிறப்பு சுகம் ஆனால்
இது நிலையில்லாதது
இப்படி எதுவும் நிலையில்லாத
இந்த உலகில் நிதானம் இல்லாமல்
ஆட்டம் போடும் மனிதன்
மனிதநேயத்தோடு வாழ பழக வேண்டும்
தனது தனக்கு என்னும் மனநிலை மாற வேண்டும்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (2-Nov-21, 12:09 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 170

மேலே