தீபாவளி வந்தாச்சு

வந்தாச்சு வந்தாச்சு
தீப ஒளியை கையில்
ஏந்தி கொண்டு
தீபாவளி வந்தாச்சு...!!

நரகாசுரனின் வீழ்ச்சியை
நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக
தீபாவளி பண்டிகையென்று
கொண்டாடி மகிழ்கின்றோம் ...!!

அந்த காலத்தில் என்று ஆரம்பித்து
தாங்கள் கொண்டாடி மகிழ்ந்த
தீபாவளி திருநாளை எண்ணி
பலரும் மனதுக்குள் மகிழ்ந்து ...
அந்த காலத்து நினைவுகளை
இந்த காலத்து இளைய பட்டாளத்துடன்
மகிழ்ச்சியோடு சுவை மாறாமல் சொல்லி
மகிழ்ச்சி கொள்கிறார்கள் ...!!

இளைய சமுதாயமே
நாம் பண்டிகை கொண்டாடுவதின்
அருமை பெருமைகளை
புரிந்து கொண்டு கொண்டாடுங்கள்..!!

பாரம்பரிய பழக்க வழக்கங்களை
நன்கு அறிந்து கொண்டு
வருங்கால சமுதாயத்துக்கு
தீப ஒளியைப்போல்
வழிகாட்டியாக இருந்து
பாரம்பரியத்தை பேணிக்காத்து
மகிழ்ச்சியோடு வாழுங்கள் ...!!

தீபாவளியின் தீப ஒளியில்
இருண்டு கிடக்கும்
நமது பாரம்பரியத்துக்கு
ஒளியேற்றி
புதிய பாதை அமைத்து
இனிய பயணங்களை
மகிழ்ச்சியோடு தொடருங்கள் ...!!

பட்டாசுக்கள் வெடித்து
சிதறுவதைப்போல்
சமுதாய சீர்கேடுகளும்
வெடித்து சிதறட்டும் ...!!

எல்லோருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Nov-21, 10:19 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 3426

மேலே