முதுமையில் அப்பாவின் எதிர்பார்ப்பு
முதுமையில் அப்பாவின் எதிர்பார்ப்பு
உன் உயிர் என்னும் விதையை விதைப்பது அப்பா.
அந்த விதையை பாதுகாத்து வளர்த்து
இந்த உலகிற்கு தந்தது அம்மா.
அதன் பிறகு உனக்கு இறுதிவரை போராடி
உன்னுடைய முன்னேற்றத்திற்காக
தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இரவு பகல்
பார்க்காமல் நித்தம் உன்னை வளர்த்தார் அப்பா.
உன்னை ஆளாக்கி முழு மனிதனாக உருவாக்கி
உனக்கு என்று ஒரு குடும்பத்தை அமைத்து
கொடுத்து இந்த உலகில் உன்னை உயரத்தில்
உட்காரவைத்து அழகு பார்த்தவர் அப்பா.
அவருக்கு முதுமையில் நீ பணமோ
கசோ,தங்கமோ, வைரமோ, கொடுப்பது
முக்கியமல்ல. உதாசீனப்படுத்தாமல் உறவு
என்னும் விலைமதிக்க முடியாத
பந்த பாசத்தை அளவு அல்லது அள்ளிக்
கொடுத்து அவரின் தனிமையை போக்கி
அவர் குறிப்பறிந்து செயல்படுதல்
மனதை நெகிழ்விக்கும் வாழ்க்கை
வளமாகும் குடும்பம் பூத்துக்குலுங்கும்