அவிழ்க்க முடியாத முடிச்சு 🎻
அவிழ்க்க முடியாத முடிச்சு.
......................
எனதருமை
மக்களே...
அவிழ்க்கவே
முடியாத முடிச்சை
அவிழ்ப்பது
வெகு சுவாரஸ்யம்.
காதலில்
சண்டை சகஜம்.
அதற்காக...?.
என் அப்பா
பாத்துருக்குற பையனையே
கல்யாணம் பண்ணிக்குறேன்,
நீ
வேண்டாம்
போ...
என்றாள்.
என்னை,
என் பெயரை,
உன்னால்
மறக்க முடியுமா?,
நீ
இல்லாட்டி
செத்துப் போய்டுவேன்
என்றேன்,
அவளை
மடக்குவதாக
நினைத்துக் கொண்டு.
எங்கப்பா
பாத்துருக்குற பையனை
நான் பார்த்ததில்ல,
அவனும்
உன்னை மாதிரியேதான்
இருப்பானாம்.
அவனுக்கும்
உன் பெயர்தானாம்...
நான் பாத்துக்குறேன்,
நீ
உன்
வேலையப் பாரு...
என்றாள்
எரிச்சலாக.
அவிழ்க்க
முடியாத முடிச்சை
போட்டதாக
நினைத்தேன்.
எளிதாக
அவிழ்த்து விட்டாளே...
ஒரு வினாடி
அவள் கண்களை
கேலியாக
பார்த்துவிட்டு
சொன்னேன்...
அவன்
என்னை மாதிரியே
இருப்பான்,
அவனுக்கும்
என் பெயர்தான்..
இப்போ, இந்த நேரம்
அவன்
என்ன பண்ணிக்கிட்டிருக்கான்
தெரியுமா?
என்று கேட்டேன்.
கோபமான
முறைப்பையே
பதிலாகத்
தந்தாள்.
நான்
சொன்னேன்,
அவன் இப்ப
என்ன பண்ணிட்டு
இருக்கான் தெரியுமா?.
உங்கூட தான்
பேசிட்டு இருக்கான்.
என்னுடைய
பெயர் மட்டுமல்ல,
என்னோட எல்லாமே
அந்த பையனுக்குத்தான்.
ஏன்னா,
அந்த பையனே
நான்தான்.
நேத்தே
உங்கப்பாவ பாத்து
பேசிட்டேன்...
சண்டையை
தொடரவும் முடியாமல்,
முடிக்கவும் முடியாமல்,
பரிதாபமாக
நின்றாள்.
அவிழ்க்கவே
முடியாத முடிச்சை
அவிழ்ப்பது,
ஒரு சுவாரஸ்யம்
என்றால்,
அவிழ்க்கவே
முடியாத முடிச்சை
போடுவது,
அதைவிட
சுவாரஸ்யம்...
.
.
✍️கவிதைக்காரன்