கஜா நஜா
வணக்கம் சோசியரே.
@@@@@
வாய்யா ராமநாதா. வீட்டில எல்லோரும் நலமா? என்ன தகவலுடன் வந்தீர்?
@@@@@@
ஐயா, என் பையன் பிறந்ததும் உங்களை வந்து பார்த்தேன். அவன் பிறந்த தேதி, நேரம் எல்லாம் கூறினேன். சோதிடச் செல்வர் ஆன நீங்கள் கூறியபடியே அவன் ராசிப்படி 'கஜா' -னு பேரு வைக்கச் சொன்னீங்க. யானை பலம் கொண்டவனாக இருப்பான் என்று சொன்னீங்க. அது சரிதான் ஐயா. அவன் ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முயற்சியிலயே வெற்றி பெற்றுவெண்கல பதக்கம் வாங்கிட்டு வந்திருக்கிறான். கல்யாண வயசு ஆகுதங்க. பையன் பேரு மாதிரியே பெயரின் முதல் எழுத்து ஒரு உயிர்மெய் எழுத்தாக இருக்கவேண்டும் என்று கூறினீர்கள். நானும் ஒரு வருசமா அதுமாதிரி பேருள்ள பேருள்ள பொண்ணை திருமண வலைதளத்தில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால உங்கள் உதவியைக் கேட்டு வந்திருக்கிறேன்.
@@@@@
நீ வந்த நேரம் ரொம்ப நல்ல நேரம். நான் சொன்ன மாதிரி பேருடைய ஒரு பொண்ணோட சாதகம் வந்திருக்கு. ரொம்ப நல்ல ராசியான பொண்ணு. ஜமீன் பரம்பரை பொண்ணு. என்னிடம் அந்தப் பெண் மாதிரி பேருள்ள மாப்பிள்ளை தேவையாம். உன் மகனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் நான்தான் ஜாதகம் எழுதினேன். அந்தப் பொண்ணுக்குப் பத்துப் பொருத்தமும் இருக்குது.
@@@@@@
ஐயா, இஷ்டலிங்க சாஸ்திரியான உங்களைத் தேடி வெளிநாடு வாழ் தமிழர்களுக்கெல்லாம் சாதகம் எழுதறவரு நீங்க. அந்த மணமகளைப் பற்றிய விவரத்தைச் சொல்லுங்கய்யா.
@@@@@@
பொண்ணுப் பேரு 'நஜா'. வெல்வனூர் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த பொண்ணு. இதோ அந்த பொண்ணோட நிழல்படம் (ஃபோட்டோ).
@@@@@
அடடா. ரொம்ப அழகான பொண்ணு. மகாலட்சுமியையே நேரில் பார்த்த மாதிரி இருக்கும். இந்த அந்தப் பொண்ணோட அப்பா ஜமீன் சாம்சிவம் முகவரி, திறன்பேசி எண் (smartphone number), மின்னஞ்சல் முகவரி எல்லாம் இருக்குது.
@@@@@@
நானும் என் மனைவியும் ஆசைப்பட்ட மாதிரியே தற்கால தமிழர் பெரும்பாலானவர்களின் நாகரிகப்படி அழகான இந்திப் பேரு உள்ள ஒரு பொண்ணை எங்க பையனுக்குத் தேடிக் கொடுத்திருக்கறீங்க. வர்றவங்க ஐயா.
@@@#@#
போய்ட்டு வாய்யா. உங்கள் குடும்பமே அதிர்ஷ்டக்காரக் குடும்பம் ஐயா.
@@@|@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Gajaa = a person who can command an elephant,
an elephant tamer.
Najaa = success