மிகச்சிறந்த பேச்சாளர்

வணக்கம் ஐயா. உங்க கட்சில ரவுடிங்களச் சேத்துக்கிறதா தகவல் கெடச்சுதுங்க. அதான் வந்தேனுங்க.
@@@@@@
சரி உம் பேரென்ன? நாங்க நள்ளிரவில குறிப்பிட்ட இடங்களில் தான் ரவுடிகள எங்க கட்சில சேர்க்கிறது வழக்கம். இன்னிக்கு குன்னத்தூர் ஏரிக்குப் பக்கத்தில ஆள் சேர்ப்பு நடக்கிறதுன்னு.யார் சொன்னது?
@@@@@
ஐயா எம் பேரு அரைபிளேடு அற்புராஜ். நான் பிறந்து வளந்ததெல்லாம் கொங்கு மண்டலத்தில ஒரு.பெரிய ஊருல பொறந்தேனுங்க. எட்டாம் வகுப்பு படிக்கிறபோதே என்னைத் திட்டின ஆசிரியர் தலைல கல்லை வீசி அவுரு மண்டையை ஒடச்சேன். அவுரு மயங்கி விழுந்துட்டாருங்க. அவுரு தலை ஏற்பட்ட காயம் ஆறி ஒடம்பு தேறி வேலைக்கு வர ஒரு மாசம் ஆச்சுங்க. தலைமை ஆசிரியர் காவல் நிலையத்துக்கு தகவல் சொன்னாரு. நான் ரண்டு வருசம் சிறுவர் சீர்திருத்த பள்ளில நல்லவன் மாதிரி நடிச்சு வெளில வந்து ரவுடி அரைப்பல்லு ராஜதுரைகூடச் சேந்து ரவுடித்தனத்தை எல்லாம் கத்துகிட்டு கண்ட எடத்தில ரகளை பண்ணி, அடிதடி கலாட்டா வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது என்னோட தொழிலாப் போச்சுங்க. எப்பவும் அரை பிளேடு எங் கையில இருக்கும். என்னோட ஆயுதமுங்க. எனக்கு வயசு முப்பதுங்க. பதினஞ்சு தடவை ஜெயிலுக்கு போனவன். நேத்துத்தான் விடுதலை ஆனேனுங்க. இந்தப் துண்டுப் பேப்பரப் பாருங்க.
@@@@@@
"எட்டாம் வகுப்பு மாணவன் கைது. ஆசிரியர் மண்டை உடைந்து ஆசிரியர் ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிவிழுந்தார்". இது ஒண்ணே பாதும் நீ எங்க கட்சில சேர. பொய் நெறையா நகைச்சுவையோட பேசுனா உனக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். நம்ம கட்சிக்கு எதிரா இருக்கிற ஏதாவது ஒரு கச்சியைப் பத்தி ஆறு பக்கம் எழுதிக் குடு
@@@@(
(ரவுடி எழுதுகிறார். அரைமணி நேரம் ஆனபின்பு ரவுடி தான் எழுதியதைக் கொடுக்கிறார். தலைவர் வாங்கிப் படித்துப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்)
#@######
சபாஷ். அருமை. அற்புதம். அருமையான நகைச்சுவை. ஏராளமான பொய்க் குற்றச்சாட்டு. இதுவரைக்கும் எங்க கட்சில இதுமாதிரி பேசுனவங்க யாருமே இல்லை. அதனால உனக்கு சீர்மிகு மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் குடுக்கிறேன். நாளைக்கு கட்சித் தலைமை நிலையத்துக்கு வா. பதவியேற்பு விழா. ஒரு பங்களா. கார். டிரைவர். மாசம் ரண்டு லட்சம் சம்பளம். நீ பேசப் போற ஊரில் உள்ள நமது கட்சி உனக்கு எல்லா வசதிகளையும் செய்து குடுக்கும். பெட்ரோல் செலவு சம்பளம் டிரைவர் எல்லாம் கட்சியே குடுக்கும். சரி நாளைக்கு காலைல சரியா பத்தரை மணிக்கு பதவி ஏற்பு விழா. நீ பத்து மணிக்கு தலைமை நிலையத்து வந்திடு.
@@#@@
(ரவுடி தலைவர் காலில் வணங்கி): ரொம்ப தேங்ஸுங்க ஐயா.
@@@@@@@

எழுதியவர் : மலர் (7-Nov-21, 8:22 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 85

மேலே