மறையர் அல்லது பறையர்
மறையர் அல்லது பறையர்றையர் தமிழகம் கேரளம் கருநாடகம் இலங்கையில் பெருமளவில் வாழும் இனக்குழு இவர்களை சாம்பவர் மறையர் அல்லது அறையர் என்றும் அழைப்பர்.
ஆதி சிவனே சாம்பவ குலத்தைச் சேர்ந்த பறையர் தான் என்பர், பறையர் என்பவர் ஆதி தொல் தமிழ் குடி, அரச குடும்பமாக உயர்ந்த இடத்திலிருந்து வந்தவர்கள் யென சங்ககாலத்துக் குறிப்புகள்.வரலாற்றில் சிற்றரசர்களாகப் பறையர்கள் இருந்துள்ளனர்
சங்க காலத்தில் பறையர்கள், மிகச் சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர்.களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாகக் கொண்டிருந்தனர். பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன யென ஆய்வுகள் கூறுகின்றன. ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.
தஞ்சை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவர்.
கோவில் ஒன்றிற்குக் கொடை அளித்ததாக, தென் இந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண் 794 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் பறையர்கள் சதுர்வேதி மங்கலங்களில் குடியிருந்ததை அறிய முடிகின்றது.
பறையூர்
இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றிழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது.[சிலப்பதிகாரத்திலும் 'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்'என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்று வரை கேரளாவில் பறையன் துள்ளல் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது.
வில்லிகுலப் பறையர்கள்
இலங்கையிலிருந்த அடங்காப்பதத்தில் நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் வில்லிகுலப்பறையர்கள் எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் என அழைக்கப்பட்டது.
நந்தன் என்ற சிற்றரசன்
சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது.
இவர்கள் மறை ஓதியவர்கள் அதனால் மறையர் என்பதே மருவி பறையர் ஆனதாக பறைகிறார் அயோதி தாச பண்டிதர். பறை என்பது தமிழர்களின் தொல் இசைக்கருவி பறையறைந்து சேதி சொல்பவர்கள் இவர்கள் என்பதால் இவர்கள் பறையர்கள் என்றாக்கப்படுகின்றனர்.
இவர்கள் ஆதி கால அரசர்களாக இருந்தவர்கள் அதனால் அரையர் என்றும் வழங்குவர் சிவனே முதல் பாண்டிய மன்னன் என்றும் வழங்குவர்.
இப்படி தான் பறையர் என்ற சொல் பறையிலிருந்து வந்தது, ஆதியில் பாணன் பறையன் துடியன் கடம்பன் என்ற இந்த நால் குடியைத் தவிர வேறு குடிகள் தமிழரிடம் இல்லை என்கிறது சங்க இலக்கிய புறநானூற்றுப் பாடல். இவையே மருவிப் பல குடிகளாக அவரவர் செய்த தொழிலுக்கு ஏற்றவாறு பெயரை வைத்து அடையாளம் காணா பட்டது
ஆரியர்கள் வருகைக்குப் பின் நால் வண்ண கோட்பாட்டில் மனுவாடி தத்துவத்தில் பிராமணர்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் அவர்களைக் கடுமையாக எதிர்த்தவர்களைப் பிறப்பின் அடிப்படையில் படி நிலைகளை அமைத்த போது கீழ் நிலையில் வைத்தனர் அதன் படி பறையர்கள் பஞ்சமர்கள் என்றாக்கினர் அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்க்குப் பிறகு ஐந்தாம் தர மக்களாக்கினர்.
அதன் படி பறையர் என்பவர்கள் மனுவின் வர்ணாசிரம குற்றவாளி படிநிலை தத்துவங்களை ஏற்ற காலம் முதல் பறையர் என்றால் தாழ்த்தப்பட்ட தீண்ட தகாத மக்கள் என்ற வரையறையின் கீழ் வைத்தனர், அதனால் காலப்போக்கில் கீழ் சாதி என்றிழைக்கப்பட்டது.
இவர் அனைவரும் அரசு குடும்பத்தார் ஆவர்
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கோசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றி வித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயம்புத்தூர் என அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.
இப்பின்னணியில் வேறுசில கல்வெட்டுகளையும் இங்குக் காணலாம். இவர்களில் பெயர் என்ற பிரிவினர்களைப் பார்த்தோம். இப்பெயருக்குள் மற்றும் ஒரு உட்பிரிவு உண்டு. அவர்களைக் கல்வெட்டுக் கூறுகிறது. சில பிரிவானர் பறையர் என்று அழைக்கப்பட்டனர். இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நூற்றாண்டில்) கோயிலில் விளக்கு எரிக்க பத்து வராஹன் பணம் கொடுத்தவன் பெயர் "கொற்ற மங்கலத்திருக்கும் வெள்ளாளன் பொய்யரில் பறையன் பறையன்" என்று உள்ளது. வெள்ளாளரில் பொய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவானர் இருந்துள்ளனர் என இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் "வெள்ளாளன் பொய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான். இது போல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். "வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்கா முண்டன்" என்பவன் குறிக்கப் பெறுகிறான். இதிலிருந்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளது. இவன் நாட்டுக்கா முண்டன் என்று அழைக்கப் படுவதிலிருந்து வடபரிசார நாட்டுக்கே வெள்ளாளர் குடியில் தலைவனாகவும் இருந்திருக்கிறான் என்று அறிகிறோம். ஆதலின் இவர்கள் நிலச்சு வாந்தாராகவும், பொருளுடையோராகவும் மக்களிலே சிறந்தோராகவும் வாழ்ந்துள்ளனர் . வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்