ஆயுதமாக நினைப்பு

அடி செவத்த புள்ள செவத்த புள்ள
ஏ செங்குருதிக் கொதிக்குதடி
உன்ன காணாம

உன் செந்நிற மேனிக்குள்ள
பச்ச நரம்பு ஒடயில
என் மனமும் துடிதுடித்ததடி அன்று

பாழும் மனம் உன்னிடம்
தொலையில உன்னை இங்கு காணலையே என் மனமும் தாங்கலையே இன்று

செங்காந்தளுக்கும் சிலிர்க்குமடி
உன் தேகம் பார்த்தால்
சிவந்து போகும் இடமெல்லாம்
உன் முகமடி

எங்கே நீ என நான் கண்டு அறிவேனாடி
ஆயுதமாக தான் உன் நினைப்பு
என்னை கொல்லுதடி

எழுதியவர் : (7-Nov-21, 9:12 pm)
பார்வை : 144

மேலே