வெண்பா வில் எளியதும் கடினமும்

எளியமுறையில் வெண்பா

அப்பரி மீதமர்ந்த யான்சென்ற வவ்வமயம்
உப்பரிகை முன்பக்கத் தொங்கலில் -- துப்புவான்
கார்முகிலைக் கோதும் பவழக்கை யான்கூந்தல்
பார்த்துவியந் தேநானு மன்று

கடிதான அதே வெண்பா

அப்பரி மீதமர்ந்து பையவேக் கண்டநானும்
உப்பரிகை தொங்கலுலர் கூந்தல்பெண்-- துப்புவான்
கோதிடுங்கார் மேகக் குமுத விரலையம்
சோதித்த செம்பவழ மோ

எழுதியவர் : பழனி ராஜன் (8-Nov-21, 5:24 pm)
பார்வை : 172

மேலே