பிழைப்பதற்கு வழிகள் உண்டு

#முத்திறனில்#பாவைகளின்#முத்திரை

சாட்டை என்கிற படத்தின் "இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே" என்கிற பாடல் மெட்டில் உழைப்பு என்கிற கரு கொண்டு எழுதிய பாடல்

#பிழைப்பதற்கு வழிகள் உண்டு இந்த மண்ணிலே
உழைப்பதற்கு உறுதி கொண்டு வெல்லு உலகையே
சோம்பல் கொண்டு நீயிருக்க வெளிச்சம் கிட்டுமோ
சோர்வகற்றி உழைத்திருக்கத் துன்பம் ஒட்டுமோ
இலட்சிய உறுதியோடு இலக்குகள் தேடிஓடு
மலர்ச்சியில் மகிழ்ச்சியாவும் வந்து கூடுமே. !

தடை தடை தடையைத் தாண்டாடா
தடை தடை தடையைத் தாண்டாடா
மடைகளை உடைத்துப் பாயடா..!

பிழைப்பதற்கு வழிகள் உண்டு இந்த மண்ணிலே
உழைப்பதற்கு உறுதி கொண்டு வெல்லு உலகையே
சோம்பல் கொண்டு நீயிருக்க வெளிச்சம் கிட்டுமோ
சோர்வகற்றி உழைத்திருக்கத் துன்பம் ஒட்டுமோ
இலட்சிய உறுதியோடு இலக்குகள் தேடிஓடு
மலர்ச்சியில் மகிழ்ச்சியாவும் வந்து கூடுமே. !

தடை தடை தடையைத் தாண்டாடா
தடை தடை தடையைத் தாண்டாடா

தஞ்சம்மென்று வந்த பேர்க்குத் தோள் கொடுக்க மறவாதே
வஞ்சம்கொண்ட நரிகளையே வீழ்த்திடநீ தயங்காதே
வளர்ந்திடும் போதிலே முடக்கிடக் கூடுவார் ஒடுங்குதல் உதவாதே
அயற்சியை ஓட்டிடு முயற்சியைக் கூட்டிடு
கேடுகள் நெருங்காதே

தடை தடை தடையைத் தாண்டாடா
தடை தடை தடையைத் தாண்டாடா
மடைகளை உடைத்துப் பாயடா..!

வெம்மை சொல்லில் தாக்கினாலும்
வெந்தே தான் தணிவோமே
வெற்றிடங்கள் யாவும்கண்டு
வெற்றி கொண்டு நிறைப்போமே
ஓய்வின்றி உழைத்திட தேய்பிறை ஏதடா
நிலவென்றும் மறையாதே..!
நேர்மறை எண்ணங்கள் ஏற்றிடும் தீபங்கள் வெளிச்சங்கள் குறையாதே..!

தடை தடை தடையைத் தாண்டாடா
தடை தடை தடையைத் தாண்டாடா
தடை தடை தடையைத் தாண்டாடா
மடைகளை உடைத்துப் பாயடா..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-Nov-21, 5:27 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 137

மேலே