ஒத்து வாழுங்கள்

உலக மக்களெல்லாம்
வணங்கி வேண்டுவது
சீரான வாழ்க்கைக்கு,
இதுவரை எவருக்கும்
கிடைத்ததுமில்லை
இனி கிடைக்கபோவதுமில்லை
ஆசைக்கோர் அளவுண்டு

அகிலம் சுழல்வது அதனிஷ்டப்படி
அதனை தடுக்க இயலாது
எல்லாம் படைத்தபடி தான் நடக்கும்
எதுவும் நம்மை கேட்பதில்லை
நம் சொல் எடுபடாதபோது
நாமும் அதனை மாற்றமுடியாது

அதனால் வருந்துவதும்
அதற்காக போராடுவதும்
எதனையும் அசைத்து விடாது
ஆதலால் மாற்ற முடியாததை
அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்
மனவேதனை விலகும்
மகிழ்ச்சியாவது கிடைக்கும்

சொந்த பந்தங்களின் சாவு
சொல்லொனாத் துயர் தரும்
இது இயற்கையானது
அனைவரும் சந்திக்கும் நிகழ்வு,
மாற்றமுடியாததை ஏற்றது போல்
இதனையுமேற்றுக்கொண்டு
உலகோடு ஒத்து வாழுங்கள்

எழுதியவர் : கோ. கணபதி. (9-Nov-21, 4:07 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : otthu valungal
பார்வை : 52

மேலே