மனமார்ந்த வாழ்த்துகள் நண்ப

வழியனுப்பி வைக்கப்பட்ட நட்பே
வான்வெளியில்
அனுப்பி வைக்கப்படும்
இந்த வாழ்த்து செய்தி
உரிய நேரத்தில்
உனக்கு கிடைக்காமலே
போகக்கூடும்
என் வருத்தங்களைப் போல...!

உளறிக் கொட்டி அழுது புரளும்
அசட்டு அன்பெனப்படுவது
இந்த வாழ்த்துகளில்
மறைந்திருக்கவில்லை என்று
உறுதியளிக்கிறேன்

விடுதலை கொடுத்த சிறகுகளுக்கு
கொஞ்சம் பறக்கவும்
கற்றுக் கொடுத்த
சுதந்திரம் மட்டுமே...
ஆம்... நமக்கான
சுதந்திரம் மட்டுமே
பருவமடைந்த கூட்டுப் புழுவாய்...

விழியில் பட்டு விலங்கிட்டு
கொள்ள விரும்பாமல்
வலம் வருகிற
விரிந்த இறக்கைகளில்
பிசுபிசுப்பிக்கும்
குருதிப் பொறுக்காய்
சில அவதானிப்புகள்...

கடவுளின் கருணையின் பொருட்டு
பொய்களேதுமற்ற
சாத்தானின் உலகில்
சத்தியத்தின் பெயரால் கூறுகிறேன்
வான்வெளியில்
அனுப்பி வைக்கப்படும்
இந்த வாழ்த்து செய்தி
உரிய நேரத்தில் உனக்கு
கிடைக்காமலே போகட்டும்
என் வருத்தங்களைப் போல...!
- மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி (18-Nov-21, 7:53 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 325

மேலே