மனம் இல்லாத மனிதர்கள்
உயிரற்ற கண்ணுக்கு தெரியாத காற்று மனிதன் உயிர் வாழ உதவுகின்றது
உயிரற்ற நீர் மனிதன் உயிர் வாழ பல விதத்தில் உதவுகிறது
உயிரற்ற உணவுகள் மனிதன் உயிர் வாழ உதவுகின்றது
உயிரற்ற பல பொருட்கள் மனிதனுக்கு பல விதத்தில் உதவுகின்றன
உயிரற்ற கல்வி வாழ்க்கையில் மனிதன் முன்னேற உதவுகின்றது
உயிரற்ற பூமி நாம் உயிரோடு இருக்கும் போது இறந்த பிறகு வாழ்வதற்கு இடம் தந்து உதவுகிறது
இப்படி இந்த உலகில் உயிரற்றவைகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் மனிதனுக்கு உதவும் போது மனிதன் மட்டும் ஏன் தனக்கு தன் குடும்பத்திற்கு என்று உதவ மனம் இன்றி மதி கெட்ட மனிதனை வாழ்கிறானோ?