தீபமேக் கடவுள் ஜோதியடா
மடமை யிருளாம் சனியகற்றும் ஜோதி
கடவுளடா மூடா வறி
அடிமுடிக் காணா ஜோதி
கார்த்திகைமா தத்தில் அடிமுடி காணாத்தீ
பார்த்திட ஜோதிகாட்டி னார்நினைவாய் -- பார்கார்த்தி
கேயனென்றார் கந்தயிறை யைத்தான் வடக்கிலும்
ஓயப்பா வம்நீ தொழு
பரம சிவன் அடிமுடிக் காணா ஜோதியாம் கார்த்திகை கிருத்திகையான இன்று .அவரைத்
தொழுதல் வேண்டி மலைக்குன்றெலாம் கொப்பரநெய்யில் நூல் திரியிட்டு தீபமேற்றி
கூட்டுப் பிரார்த்தனை செய்தார் தமிழர்.. மனிதர் ஏற்றும் தீபத்தை தானே எரியுதென்று
யாரும் கூறவில்லை. ஆனால் பகுத்தறியாப் பதர்கள் இது தானாக எரியவில்லை என்று
இதைக்கூட மிகைப்படுத்தி யன்று பரபரப்பு பேசினார். அறிவிலிகள். மனிதனுக்கு
தெரியாதா இது மனிதர் ஏற்றிய தீபமென்று. கார்த்திகேயனை வடக்கிலும் முருகனைக்
கார்த்தி கேயன் என்று தொழுவர். ஏன் சந்திர குப்த பேரரசர் துருப்பிடிக்கா இரும்புத்
தூணை சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடத்திற்கு முன் எழுப்பினார். அதில் ஆறு முகன் மயிலில் அமர்ந்துள்ள உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளதை இன்றும் காணலாம்.
முருகை நாம் கொண்டாட அவர் ஏனோ மறந்தார்.
தீபஜோதி தெய்வம் விளக்கல்ல நீயுமே
தீப வணக்கம் செலுத்து