தள்ளி போட்டால் வாழ்க்கை நம்மை தள்ளி விடும்
நேற்று காலை எழுந்தவுடன் இன்று உத்தமனாக இருக்க தீர்மானித்தேன்
இரவு "இன்று முடிந்தது நாளை நிச்சயம் உத்தமனாக இருப்பேன்' என்றேன்
நேற்று காலை எழுந்தவுடன் கோபமின்றி சந்தமுடன் இருக்க தீர்மானித்தேன்
கடும் கோபம் கொண்டேன், நாளை கட்டாயம் சாந்தமாக இருப்பேன் என்றேன்
நேற்று காலையில் இன்று எவருக்காவது உதவலாம் என்று தீர்மானித்தேன்
மற்றவர் உதவி கொண்டேன், செய்யவில்லை, நாளை செய்வோம் என்றேன்
நேற்று காலையில் இன்று இரண்டு நண்பர்களிடம் உரையாடுவேன் என்றேன்
அலுவலக சூழலில் மறந்து விட்டேன், நாளை அவர்களிடம் பேச நினைத்தேன்
நேற்று அம்மாவுக்கு போன் செய்து அவள் உடல் நலனை அறிய நினைத்தேன்
போன் போட்டேன், தாய்க்கு இல்லை, நாளை அம்மாவிடம் பேச நினைத்தேன்
நேற்று என் இரண்டு குழந்தைகளுக்கும் ஐஸ் கிரீம் வாங்கி தர நினைத்தேன்
பெரிய மகன் கோபப்பட்டதால் இருவருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி தரவில்லை
இப்போது வாழ்க்கையில் ஆறு மாதங்கள் வேகமாக உருண்டு ஓடிவிட்டது
இன்னமும் உத்தமனாக வாழ முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்
கோபம் இன்னும்வந்து போகிறது, போகும்போது சந்தோஷம், வரும் போது?
மனதை தொட்டு பார்க்கையில் நான் அதிகம் மற்றவர்கள் உதவி நாடுகிறேன்
ஆனால் எதோ ஒரு சாக்கு சொல்லிவிட்டு நான் பிறருக்கு உதவுவதில்லை
பல நண்பர்களிடம் உரையாடவும் அவர்களை நேரில் சந்திக்க நினைத்தேன்
என்னிடம் பல நண்பர்கள் வந்து சென்றார்கள் போனில் உரையாடுகிறார்கள்
என் குழந்தைகளுக்கு இதுவரை ஐஸ் கிரீம் வாங்கி கொடுக்க இயலவில்லை
பெரியவனுக்கு தொண்டை புண் ஏற்பட்டு ஐஸ்கிரீம் சாப்பிட தடை உள்ளது
தாய்க்கு அன்று போன் போட்டு பேச நினைத்தேன், ஆனால் செய்யவில்லை
இன்று தாய்க்கு போன் போட்டாலும் எடுக்கவில்லை, ஏன் என்று தெரியுமா?
என்னை பெற்ற தெய்வம் மறுநாளே மாரடைப்பால் இறந்துவிட்டாள் தானே!