சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்

ஆண்களின் ஆக்கமும் ஆண்களின் அழிவுகளும்
கடின உழைப்பிற்கு சொந்தக்காரர்கள்
கஷ்டங்களை கண்டு களங்கத்தவர்கள்
துன்பங்களையும் துயரங்களையும் துடைத்து எறிபவர்கள்
தன் ஆசைகளை அடக்கி ஆள்பவர்கள்
தன்னைவிட தன் குடும்பத்தையே பெரிதாக நித்தம் நினைப்பவர்கள்
தன் மனைவி கட்டுப்படுத்தினாலும் தன் பெற்றோரை காக்க தவறாதவர்
வீரமானவர்கள் என்றாலும் மனதளவில் மலர் போன்று மென்மையானவர்கள்
தன் வந்த வழியை என்றும் மறக்காதவர்கள்
பெண்களை தெய்வமாக மதித்து வணங்குபவர்கள் இந்த உலகில் பல ஆண்கள்.
ஆனாலும் சில பதறுகள் இருக்கத்தான் செய்கிறது.
அவர்கள் பார்வையில் பெண்களின் மார்பகங்கள், நீண்ட கூந்தல், சிறிய இடை,
தொடை போன்றவற்றை தான் ரசிக்கின்றனர்.
மேலும் கொச்சைப்படுத்தி பேசுவது மற்றும் ஏழுதவும் செய்கின்றனர்.
பல குடும்பங்களில் சமைத்தல்,படுக்கையை பகிர்ந்து கொள்ளுதல்,
குழந்தைப்பேறு வளர்த்தல்,பணிந்து நடத்தல் அனைத்தும் கடமை என்று எண்ணுகிறார்கள்.
அவர்களின் கற்பைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
அவர்களை ஒரு கவர்ச்சி பார்வையிலேயே பல ஆண்கள் பார்க்கின்றனர்.
மேலும் பல ஆண்கள் குடும்ப பொறுப்பின்றி பலவிதமான போதைக்கும்
தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்கின்றனர் இந்த உலகில்.
பலவிதமான சூதாட்டத்தில் தேவையற்று பணத்தை இழக்கின்றனர்.
இப்படி சமூகத்தில் பலரது மனதில் ஆண்களை பற்றி படிந்துள்ள கறைகளை.
இந்த சர்வதேச ஆண்கள் தினத்தில் நீக்க முயற்சி எடுப்போம்.
அனைவருக்கும் எனது சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (23-Nov-21, 9:32 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 107

மேலே