🥰அறைக்குள்🥰

குருவி கூட்டத்தில்
குதூகலமாய் இருக்கிறேன் - என்
சிறுஇதய  அறைக்குள்.........!!

தனிமையில் இருக்கையில்
தயங்காமல் ஏற்றாய் - என்னை
உன்காதல் அறைக்குள்.........!!

கலங்கிய நிலையில்
காப்பாற்றி இழுத்தாய் - உன்
அன்பெனும் அறைக்குள்.........!!

அருகாமையில் இருக்கையில்
அழுகையால் வென்றாய் - உன்
அரவணைப்பு என்னும் அறைக்குள்........!!


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (23-Nov-21, 10:01 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 217

மேலே