கருணை

"கந்தன் கருணை வருமோ?
நிலை மாறுமோ ?
குமரன் அருளும் வருமோ?
குறை தீருமோ ? (1)


மயிலில் ஏறி பறந்தாரோ?
கை வேலின் அழகில் மறந்தாரோ?

உயிர் உருகுதே,
மனம் நெகிழுதே ,
கண்கள் நனையுதே,
கண்ணீர் பெருகுதே,

எனையே தேடி, (கந்தன்)


ஆறுமுகம் இன்றி கதி ஏது ?
ஆறுதலைத் தர இறை ஏது? (1)

ஆவல் வருகுதே,
அன்பில் மருகுதே,
உன்னை நினையுதே,
நெஞ்சம் கரையுதே,

எனையே தேடி, (கந்தன்)"
---

எழுதியவர் : (23-Nov-21, 9:58 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 257

மேலே