தெளிந்த மனம்

நம் மனம் பார்ப்பதை, விழி பார்க்கிறது.
நம் மனம் கேட்பதை, செவி கேட்கிறது.
நம் மனம் சுவாசிப்பதை, நாசி சுவாசிக்கிறது.
நம் மனம் சுவைப்பதை, நாவு சுவைக்கிறது.
நம் மனம் தொடுவதை, கரம் தொடுகிறது.
நம் மனம் போனபாதையில், பாதம் போகிறது.
நம் மனம் நம் மூளையை தூண்டுகிறது.
நம் மூளை நம் உடலை செயல்படுத்துகிறது.
நம் மனதின் வீரியம், நம் செயலில் தெரியும்.
நம் செயலின் வீரியம், நம்மை அடையாளம் காட்டும்.
நம் அடையாளமே நம் மனதின் வீரியம்.... !!!
நம் அடையாளத்தை தேர்வு செய்வது நம் மனமே...!!!
நம் அகத்தே தெளிந்த நீரோடையாக்குவோம்...!!!
நம் முகம் கொடிக்கட்டி பறப்பதை பார்ப்போம்....!!!

எழுதியவர் : இரா.தெய்வானை (23-Nov-21, 6:43 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
பார்வை : 167

மேலே